நேற்று நடந்த விஜய் ஹசாரே போட்டியில் குஜராத் அணியும் , தமிழ்நாடு அணியும் மோதியது. இப்போட்டியில் குஜராத் அணி பந்து வீச முடிவு செய்தது.அதன் படி முதலில் இறங்கிய தமிழ்நாடு அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 274 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக முரளிவிஜய் 94 ரன்கள் அடித்தார் அபிநவ் முகுந்த் 79 ரன்கள் அடித்தார். குஜராத் அணி சார்பில் ரூஷ் கலரியா, அர்சான் இருவரும் தலா 3 விக்கெட் எடுத்தனர். பின்னர் 275 ரன்கள் இலக்குடன் இறங்கிய குஜராத் அணி 42.2 ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்ததால் தமிழ்நாடு அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணி விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று உள்ளது.தமிழ்நாடு அணி இதுவரை ஒன்பது போட்டிகளில் விளையாடி உள்ளது.குஜராத் அணி 9 விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்று உள்ளது.இந்த தொடரில் குஜராத் அணி தமிழ்நாடு அணியிடம் தான் தனது முதல் தோல்வியை சந்தித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…