இரண்டாவது டெஸ்ட் : அபார சதம் விளாசிய கோலி ..!
இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
நேற்று முதலில் இறங்கிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 , உமேஷ் 3 , மற்றும் ஷமி 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் 21 ,மயங்க் அகர்வால் 14 ரன்களுடன் வெளியேறினர். முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்து 68 ரன்களுடன் முன்னிலையில் இருந்தனர்.களத்தில் கோலி 59 , ரஹானே 23 ரன்களுடன் இருந்தனர். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது.
நிதானமாக விளையாடி வந்த ரஹானே அரைசதம் அடித்தார்.பின்னர் அடுத்த சில நிமிடங்களில் ரஹானே 51 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.பிறகு ஜடேஜா களமிறங்க சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் கோலி சதம் விளாசினார்.
டெஸ்ட் போட்டியில் கோலியின் 27 சதமாகும் .கேப்டனாக 20 வது சதம்.இந்திய அணி 76 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 289 ரன்கள் அடித்து 114 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.களத்தில் கோலி 130 , ஜடேஜா 12 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.