சச்சினை ஓவர்டேக் செய்த ரன் மெஷின்! விராட் கோலி செய்த வரலாற்று சாதனை!
சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை கடந்த விராட் கோலிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை பொழிந்து வருகிறார்கள்.
சென்னை : விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் எடுப்பதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை படைப்பதை வழக்கமாகவே வைத்து இருக்கிறார். அப்படி தான் தற்போது, வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி வரும் டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்ட ரன்கள் எடுத்து பிரமாண்டமான சாதனையை செய்து அந்த சாதனைப் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறார்.
அது என்ன சாதனை என்றால் சர்வதேச கிரிக்கெட்டில் 27, 000 ரன்களைக் கடந்த 4வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். கான்பூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அதிரடியாக விளையாடி 35 ரன்கள் எடுத்தபோது, இந்த சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். சாதனை பட்டியலில் யார் முதலிலிடம் இரண்டாவது இடம் என்பதற்கான விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்
- சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) 782 இன்னிங்ஸ் – 34,357 ரன்கள்
- குமார் சங்கக்கார (இலங்கை) 666 இன்னிங்ஸில் 28,016 ரன்கள்
- ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) 668 இன்னிங்ஸில் – 27,483 ரன்கள்
- விராட் கோலி (இந்தியா) 594 இன்னிங்ஸில் *- 27,012 ரன்கள்
- மஹேல ஜெயவர்த்தனே (இலங்கை) 725 இன்னிங்ஸில் – 25,957ரன்கள்
இந்த பட்டியலில், விராட் கோலி 4-வது இடத்தில் இருந்தாலுமே, 27,000 ரன்களை சச்சின் டெண்டுல்கரை விட வேகமாக இந்த சாதனையை படைத்தது அவருடைய சாதனையை முறியடித்து இருக்கிறார்.
ஏனென்றால், சச்சின் 623 இன்னிங்ஸ்களில் தான் இதே மைல்கல்லை எட்டி சாதனை படைத்தது இருந்தார். ஆனால், அவரை விட குறைவான போட்டியில் விளையாடி விராட் கோலி இந்த சாதனையை படைத்தது இருக்கிறது பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் அவரால் சச்சின் எடுத்துள்ள 34,357 ரன்களைக் கடப்பது என்பது கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. அந்த ரன்களை அவரால் எட்ட முடியுமா என்பதனை அடுத்தடுத்து நடைபெறும் சர்வதேச போட்டிகளில் விளையாடும் பொழுது பார்க்கலாம். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை கடந்த விராட் கோலிக்கு அவருடைய ரசிகர்கள் பலரும் தங்களுடடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.