டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்த லவ்லினாவின் கிராமத்திற்கு சாலை அமைக்கும் பணிகளை அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.
ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோகெயின் குத்துச்சண்டையில் 69 கிலோ வெல்டர் பிரிவில் ஒலிம்பிக் பதக்கத்தை தற்போது உறுதி செய்துள்ளார். இதன் காரணத்தினால் இவர் சொந்த ஊர் திரும்பும்போது தார் சாலையில் செல்லக்கூடிய வகையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அசாம் மாநிலத்தின் கோல்கேட் மாவட்டத்தில் உள்ள பாரமுதியா கிராமத்தை சேர்ந்தவர் லவ்லினா. இவரது கடின உழைப்பால் தற்போது ஒலிம்பிக் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன் காரணத்தால் இவருடைய இல்லத்திலிருந்து பாரமுதியா கிராமம் வரையிலான 3.5 கி.மீ தொலைவு வரை தார் சாலை அமைக்கவுள்ளனர்.
மேலும் இது குறித்து உள்ளூர் எம்.எல்.ஏ. பிஸ்வாஜித் தெரிவித்துள்ளதாவது, ஒலிம்பிக்கிலிருந்து தாயகம் திரும்பும் லவ்லினாவிற்கு நாங்கள் பரிசளிக்கும் விதமாக அவரது கிராமத்தின் சாலையை சீரமைத்து வருகிறோம். லவ்லினா தங்கம் வென்று இந்தியா திரும்ப வேண்டும் என்று அசாம் மக்களும், நாட்டில் உள்ள எல்லோரும் பிரார்த்திக்க வேண்டும்.
இதன் மூலமாக இவரது கிராமத்திற்கு அடிப்படையான விளையாட்டு கட்டமைப்புகள் இவ்விடத்தில் உருவாக்கப்படும். இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் செய்வார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…