FIFA2023: உலகக்கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை பெற்றது அர்ஜென்டினா..!
உலக கால்பந்து நிர்வாகக் குழு 2023 FIFA U-20 உலகக் கோப்பையின் தொகுப்பாளராக அர்ஜென்டினாவை அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு 20 வயதுக்குட்பட்டோருக்கான ஃபிஃபா உலகக் கோப்பையை அர்ஜென்டினா நடத்தும் என உலக கால்பந்து நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. இந்த உலகக்கோப்பையை நடத்துவதற்கான டெண்டர் ஏலத்தில் இந்தோனேசியா மற்றும் அர்ஜென்டினா தங்களது ஏல விவரத்தை சமர்ப்பித்தது.
அர்ஜென்டினா கால்பந்து சங்கம் (AFA) சமர்ப்பித்த ஏல விவரத்தை சமர்ப்பித்ததை தொடர்ந்து 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை அர்ஜென்டினா நடத்தும் என்று உலக கால்பந்து நிர்வாகக் குழு அறிவித்துள்ளது. இந்த முடிவால் உலகக் கோப்பையை நடத்துவதில் இருந்து இந்தோனேசியா விலகியது.
இதனையடுத்து, கடந்த வாரம் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவிற்கு சென்று, ஃபிஃபா பிரதிநிதிகள் ஆய்வு செய்தனர். தூதுக்குழு உறுப்பினர்கள் போட்டி நடைபெறும் இடங்களையும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளையும் பார்வையிட்ட பின்னர் இந்த ஒப்பந்தம் அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தால் கையெழுத்திடப்பட்டது.
வருகின்ற மே மாதம் 20ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதி வரை நடைபெறும் இந்த ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் ஆறு குழுக்களில் ஓவ்வொன்றும் நான்கு அணிகளைக் கொண்டிருக்கும். போட்டியை நடத்தும் உரிமையைப் பெற்றுள்ளதால், இந்தோனேசியாவுக்குப் பதிலாக அர்ஜென்டினா போட்டியில் பங்கேற்கிறது. ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் அர்ஜென்டினா ஆறு முறை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.