தனக்கு ஏற்பட்ட நோயால் கால்பந்து போட்டியை விட்டு விலகிய வீரர்..?

மும்பை எஃப்சியின் இளம் கால்பந்து வீரர் அன்வர் அலி கடந்த 2017ம் ஆண்டு இந்தியா நடத்திய ஃபிஃபா யு -17 உலகக் கோப்பையின் போது முதன்முதலில் விளையாடினார், அந்த போட்டியின் பிறகுதான் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இவர் கிங்ஸ் கோப்பை, இன்டர் கான்டினென்டல் கோப்பை , ஓமான், கத்தார் மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான உலகக் கோப்பை போன்ற பல போட்டிகளில் அவரது பெயரை அறியாதவரே இல்லை. இந்நிலையில் அன்வர் அலிக்கு தற்பொழுது இதய நோய் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது,
இதன் காரணமாக அவர் மருத்துவ பரிசோதனை செய்தார், அப்பொழுது மருத்துவர்கள் அன்வர் அலி கால்பந்து தொடரிலிருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தினார்கள். இதன் காரணமாக அடுத்த நடைபெறும் தொடர்களில் அவர் பங்கேற்பாரா என்ற கேள்வி எழும்பியுள்ளது.