டோக்கியோவில் நடைபெற்று வந்த ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி கோலாகலமாக 32-வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது.இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.குறிப்பாக,இந்தியாவில் இருந்து மொத்தம் 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பதக்கம் வென்ற இந்தியா:
ஒலிம்பிக்கில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்று சிறப்பாக விளையாடினர்.அதன்படி, பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கமும்,பேட்மிண்டனில் பிவி சிந்து வெண்கலமும்,குத்துச்சண்டை போட்டியில் லவ்லினா வெண்கலமும்,41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெள்ளிப்பதக்கமும், மல்யுத்தம் போட்டியில் ரவிக்குமார் தஹியா வெள்ளியும்,பஜ்ரங் புனியா வெண்கலமும் பெற்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து,ஒலிம்பிக்கில் ஒரு தங்கப்பதக்கம் கூட இந்தியா பெறவில்லை என்ற ஏக்கம் அனைவரின் மனதிலும் எழ,அதனை போக்கும் வகையில்,ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் தடகள வரலாற்றில் சுதந்திர இந்தியாவின் முதல் தங்கப்பதக்கதை வென்று சாதனை புரிந்தார்.டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 1 தங்கம்,2 வெள்ளி,4 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 7 பதக்கங்களை பெற்றுள்ளது.
முடிவு:
இதற்கிடையில்,மகளிர் ஹாக்கி அணி தொடர்ந்து 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி பின்னர் மீண்டு எழுந்து,அரையிறுதியை நோக்கி சென்று போராடி தோற்றது.அதேபோல நேற்று கோல்ஃப் போட்டியில் அதிதி அசோக் மிக குறைந்த புள்ளியில் தோற்றார்.இதனையடுத்து,ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது.
கடைசி தங்கம்:
கடைசி நாளான இன்று பெண்கள் வாலிபால், ஆண்கள் வாட்டர் போலோ, ஆண்கள் மராத்தான் உள்ளிட்ட 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறியது.அதன்படி,டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான வாட்டர் போலோவில் கிரீஸை வீழ்த்தி செர்பியா ஒலிம்பிக்கின் கடைசி தங்கப் பதக்கத்தை வென்றது.
நிறைவு விழா:
இவ்வாறு,கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு போட்டிகள் மூலம் அனைவரின் இதயத்தை நெகிழ வைத்த,ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஜப்பானின் டோக்கியோவில் நிறைவடைகின்றன.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…