2028ல் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகள் சேர்க்கப்பட உள்ளதாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் புதிதாக கிரிக்கெட், ஸ்குவாஷ், சாப்ட்பால், ஃபிளாக் கால்பந்து, லாக்ரோஸ் ஆகிய 5 போட்டிகள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த தொடரில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகளை சேர்க்க ஏற்பாட்டு குழு பல்வேறு கட்டங்களாக ஆலோசனை மேற்கொண்டு வந்தது. அந்தவகையில், மும்பையில் ஒலிம்பிக் தொடர் குறித்த ஆலோசனை கூட்டத்தில் புதிய போட்டிகளை சேர்ப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, கடந்த 13ம் தேதி மும்பையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உற்சாகத்தில் ரசிகர்கள்! 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உட்பட 5 போட்டிகள் சேர்ப்பு!
இந்த கூட்டத்தில் 2028ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகளை சேர்க்க ஒலிம்பிக் ஏற்பாட்டு குழு பரிந்துரை செய்து ஒப்புதல் அளித்திருந்தது. கிரிக்கெட் போட்டியை தவிர, ஸ்குவாஷ், சாப்ட்பால், ஃபிளாக் கால்பந்து, லாக்ரோஸ் ஆகிய போட்டிகளையும் 2028ல் ஒலிம்பிக்கில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டது. எனவே, மும்பையில் 141வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் அக்டோபர் 15 முதல் 17 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனால், 2028 ஒலிம்பிக்கில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகளை சேர்க்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில், 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் புதிதாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 போட்டிகள் சேர்க்கப்பட உள்ளதாக ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
20 ஓவர் கிரிக்கெட்டிற்கு உலகளவில் வரவேற்பு கூடிய நிலையில், ஒலிம்பிக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் முதன் முறையாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், உலக அளவில் இரண்டாவது பெரிய விளையாட்டான கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் சேர்க்க 2 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…