ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வெல்லுமா இந்திய மகளிர் அணி?

ind vs aus women t20

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய மகளிர் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இரண்டு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றிபெற்று இந்த டி-20 தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த இரண்டு அணிகளும் மோதும் டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு பதிலடி கொடுத்தது.

இதன் காரணமாக இந்த டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் இருப்பதால் இந்த டி20 தொடரில் எந்த அணி வெற்றிபெற்று கோப்பையை வெல்லப்போகிறது என்பதனை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி போட்டி இன்று நவி மும்பையில் இருக்கும் டிஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

மேலும், இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு போட்டிகளும் இதே மைதானத்தில் தான் நடைபெற்றது. அதில் இரண்டு போட்டிகளிலும் 2-வதாக எந்த அணி பேட்டிங் செய்ததோ அதே அணி தான் வெற்றிபெற்று இருக்கிறது. எனவே, இன்று நடைபெறவுள்ள போட்டியில் எந்த அணி டாஸ் வெல்கிறதோ அந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

போராடி தோற்ற ஜிம்பாப்வே.. இலங்கை அணி திரில் வெற்றி..!

இந்த டி20 தொடரில் வெற்றிபெறவேண்டும் என இரண்டு அணி வீராங்கனைகளும்  மும்மரமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்தியா

ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர்(c), ரிச்சா கோஷ்(wk), தீப்தி ஷர்மா, பூஜா வஸ்த்ரகர், அமன்ஜோத் கவுர், ஸ்ரேயங்கா பாட்டீல், டைட்டாஸ் சாது, ரேணுகா தாக்கூர் சிங், மன்னத் காஷ்யப், யஸ்திகா இஷாகுவே, சைகா பாட்டியா, அஹுஜா, மின்னு மணி

ஆஸ்ரேலியா 

அலிசா ஹீலி(c/wk), பெத் மூனி, தஹ்லியா மெக்ராத், எலிஸ் பெர்ரி, ஆஷ்லீ கார்ட்னர், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், கிரேஸ் ஹாரிஸ், அனாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், மேகன் ஷட், ஹீதர் கிரஹாம், ஜெஸ் ஜோனாசென், அலனா பிரவுன் கிங், டார்சி

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்