வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இன்று இரண்டாவது டி-20 போட்டி நடைபெற்று வருகிறது.இப்போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் பீல்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தது.இதை தொடர்ந்து இந்திய அணி முதலில் களமிறங்கியது.இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே கே.எல் ராகுல் 11 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
பின்னர் சிவம் துபே களமிறங்கினார். இவர் இறங்கிய சிறிது நேரத்திலே ரோஹித் 15 ரன்னில் வெளியேறினர்.பின்னர் நிதானமாக விளையாடிய சிவம் துபே நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பாக விளையாடிய சிவம் துபே அரைசதம் அடித்து 54 ரன்கள் குவித்தார்.இதை அடுத்து இறங்கிய மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் மட்டும் கடைசிவரை விக்கெட்டை இழக்காமல் 33 எடுத்து களத்தில் நின்றார்.
இந்நிலையில் இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் எடுத்தனர்.வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெஸ்ரிக் வில்லியம்ஸ் ,ஹேடன் வால்ஷ் ஆகிய இருவரும் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார்.171 ரன்கள் இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்க உள்ளது.
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…