ஒலிம்பிக் ஹாக்கி:இந்திய மகளிர் அணி போராடி தோல்வி…!
ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி,அர்ஜென்டினாவிடம் போராடி தோல்வியுற்றுள்ளது.
இன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி,அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.அதன்படி,போட்டி தொடங்கிய சில நிமிடத்திலேயே இந்திய மகளிர் அணி கோல் அடித்தது.இதனையடுத்து,சுதாரித்துக் கொண்ட அர்ஜென்டினா அணி, கோல் அடித்தது.இதனால்,1-1 என்ற கணக்கில் மிகவும் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது.
இதனையடுத்து,மீண்டும் அர்ஜென்டினா அணியினர் கோல் அடிக்க,அதனை முறியடிக்கும் முயற்சியில் இந்திய அணியினர் ஈடுபட்டனர்.ஆனால்,போட்டியின் முடிவில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி போராடி தோல்வியுற்றுள்ளது.இதனால்,வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கிரேட் பிரிட்டனை எதிர்கொள்ளவுள்ளது.
#TokyoOlympics | Indian women’s hockey team lose against Argentina in the semifinal match, to take on Great Britain in bronze medal clash pic.twitter.com/HJcZwP8jfZ
— ANI (@ANI) August 4, 2021