TOKYO2020: 3 போட்டிகளில் தொடர் தோல்வி – மீண்டு எழுந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் அயர்லாந்து அணியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.அதன்படி,கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற நெதர்லாந்திற்கு எதிரான பூல்(Pool) A முதல் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது.
தொடர் தோல்வி:
அதன்பின்னர்,ஜெர்மனிக்கு எதிரான இரண்டாவது லீக் ஆட்டத்திலும் 2-0 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது.
இதனையடுத்து,நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி,நடப்பு சாம்பியனான கிரேட் பிரிட்டனை எதிர்கொண்டது.போட்டியின் இறுதியில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் கிரேட் பிரிட்டனிடம் தோல்வியுற்றது.
5 வது இடம்:
ஒலிம்பிக் ஹாக்கி லீக் போட்டியில் 6 அணிகள் கொண்ட குழுவில் 4 இடங்களுக்குள் வரும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லும். ஆனால்,தற்போது இந்தியா 5 வது இடத்தில் உள்ளது.எனவே,கண்டிப்பாக அடுத்த போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
மோதல்:
இவ்வாறு தொடர்ந்து 3 போட்டிகளில் சந்தித்த தோல்விக்கு பிறகு,இன்று நடைபெற்ற பெண்கள் ஹாக்கி போட்டியில் அயர்லாந்து அணியை, இந்தியா எதிர்கொண்டது.மழை காரணமாக ஆட்டம் 1 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
மீண்டு எழுந்தது:
பின்னர்,போட்டி தொடங்கியது முதல் 56 நிமிடங்கள் வரை இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.கடைசியில் இந்திய வீராங்கனை நவ்நீத் 57 வது நிமிடத்தில் கோல் அடித்தனால்,இந்தியா 1-0 கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்று,தோல்வியில் இருந்து மீண்டு எழுந்துள்ளது.
Our first win of the Tokyo Olympics. ????????
We keep dreaming and stay in contention for the Quarter-Finals. ????????#IREvIND #HaiTayyar #IndiaKaGame #TeamIndia #Tokyo2020 #TokyoTogether #StrongerTogether #HockeyInvites #WeAreTeamIndia #Hockey pic.twitter.com/zuZeELYxOr
— Hockey India (@TheHockeyIndia) July 30, 2021
மேலும்,நாளை நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுடனான ஆட்டத்திலும்,இந்திய மகளிர் அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.அப்போதுதான் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.