உலக ஜூனியர் தடகளம் சாம்பியன்ஷிப் – வெண்கலம் வென்ற இந்தியா …!

20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் தடகளம் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றுள்ளது.
கென்யா தலைநகர் நைரோபியில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 4*400 மீ., கலப்பு தொடர் ஓட்ட தகுதிச்சுற்றில் இந்தியாவின் கபில், பிரியா மோகன், சம்மி, ஸ்ரீதர் அடங்கிய அணி 3 நிமிடம் 23.36 வினாடி நேரத்தில் ஓடி,ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனையை படைத்துள்ளனர்.இதற்கு முன் 3 நிமிடம், 26.64 வினாடியில் வந்ததே சாதனையாக இருந்தது.
ஆனால்,இதனையடுத்து நடைபெற்ற மற்றொரு தகுதிச்சுற்றில் நைஜீரிய அணி, 3:21.66 வினாடியில் வந்து புதிய சாதனை படைத்தது.இந்தியா இரண்டாவது இடம் பெற்றது.இதனைத் தொடர்ந்து,இறுதி போட்டியில் 3 நிமிடம், 20.57 வினாடி நேரத்தில் ஓடி மூன்றாம் இடத்தை பிடித்து,இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.இப்போட்டிகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
முன்னதாக, இந்தியா சார்பில் பங்கேற்ற சீமா அன்டில் (வட்டு எறிதல், 2002), நவ்ஜீத் கவுர் (வட்டு எறிதல், 2014), ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல், 2016), ஹிமா தாஸ் (400 மீ., ஓட்டம், 2018) இப்போட்டிகளில் பதக்கம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025