போராடி தோல்வி கண்ட இந்திய அணி! டேபிள் டென்னிஸ் காலிறுதியில் வெளியேறி ஏமாற்றம்!!

பாரிஸ் : இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் டேபிள் டென்னிஸ் மகளீருக்கான போட்டியில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்தியா அணி, ஜெர்மனி அணியை எதிர்த்து விளையாடியது. இந்திய அணியின் சார்பாக அர்ச்சனா கிரிஷ் காமத், மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா விளையாடினார்கள்.
இந்த காலிறுதி சுற்றில் மொத்தம் 5 போட்டிகள் இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெறும். அதில் 3 போட்டிகளை யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அரை இறுதிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி முதல் போட்டியாக இரட்டையர் போட்டியில் இந்திய அணி 1-3 எனும் செட் கணக்கில் ஜெர்மனி அணியிடம் தோல்வியடைந்தது.
அதன்பிறகு நடந்த தனி நபருக்கான போட்டியில் மணிகா பத்ரா 1-3 எனும் செட் கணக்கில் தோல்வியை தழுவினார். இதன் காரணமாக 2-0 என ஜெர்மனி அணி முன்னிலை பெற்றது. அதன் பிறகு வாழ்வா சாவா என்ற தருணத்தில் அடுத்த போட்டியில் அர்ச்சனா காமத் களமிறங்கினார். விறுவிறுப்பாகச் சென்ற அந்த 3-ஆம் போட்டியானது மிகவும் த்ரில்லாக 3-1 எனும் செட் கணக்கில் அர்ச்சனா ஜெர்மனி வீராங்கணையை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதனால், 2-1 என இந்திய அணி அந்த போட்டியில் நீடித்தது. மேற்கொண்டு நடந்த அடுத்த கட்ட போட்டியில் இந்திய அணி சார்பாகக் களமிறங்கிய இளம் வீராங்கனை ஸ்ரீஜா அகுலா, ஜெர்மனி வீராங்கனையான காஃப்மேனை எதிர்த்து விளையாடினார். இதில் கடுமையாகப் போராடிய ஸ்ரீஜா 3-0 எனும் நேர் செட் கணக்கில் ஜெர்மனி வீராங்கனையிடம் படுதோல்வி அடைந்தார்.
இதன் காரணமாக 5 சுற்று கொண்ட இந்த காலிறுதி சுற்றில் ஜெர்மனி அணி 3-1 என இந்திய அணியை வீழ்த்தி அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. மேலும், இந்த தோல்வியின் காரணமாக முதல் முறையாக மகளீர் டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதி வரை வந்து வெற்றி பெறாமல் தொடரை விட்டு வெளியேறி உள்ளது. இதனால், மேற்கொண்டு இந்திய அணி குறி வைத்த ஒரு பதக்க வாய்ப்பும் பறிபோனது என்றே கூறலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025