FIFA உலக கால்பந்து தரவரிசை..! 100வது இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி..!
பிஃபா உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
பிஃபா (FIFA) ஆடவர் உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற லெபனானுக்கு எதிரான இன்டர்காண்டினென்டல் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றது. இதனால் தரவரிசை 4.24 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இண்டர்காண்டினென்டல் கோப்பையைத் தொடர்ந்து மற்றும் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (SAFF) போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஜூன் மாதம் விளையாடிய ஏழு ஆட்டங்களில் 5 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றது.
???????? move up to 1️⃣0️⃣0️⃣ in the latest FIFA Men’s World Ranking ????????
Steadily we rise ????#IndianFootball ⚽️ pic.twitter.com/Zul4v3CYdG
— Indian Football Team (@IndianFootball) June 29, 2023
இதனால் உலக கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 100வது இடத்தில் உள்ளது. மேலும், உலக கால்பந்து தரவரிசையில் 5 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி 100வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.