ஒலிம்பிக் ஹாக்கி:ஸ்பெயினை திணறவிட்ட இந்திய அணி – அபார வெற்றி…!
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி,ஸ்பெயின் அணியை வென்றது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.மேலும்,ஹாக்கி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஸ்பெயின், அர்ஜென்டினா ஆகிய நாடுகள் ‘ஏ பிரிவில்’ இடம் பெற்றுள்ளன.
இந்தியா vs நியூசிலாந்து:
அதன்படி,நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-2 என கணக்கில் வெற்றி பெற்றது. இதனால்,டோக்கியோவில் இந்த முறை இந்தியர்கள் ஒரு பிரகாசமான பதக்கத்தை வெல்வார்கள் என்ற நம்பிக்கை எழுந்தது.
இந்தியா vs ஆஸ்திரேலியா :
இதனையடுத்து,நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாம் நாள் லீக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி கோல் ஏதும் அடிக்கவில்லை.இதனால்,1-7 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய ஹாக்கி அணி வெற்றி பெற்றது.
ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி:
இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற 3 ஆவது லீக் போட்டியில் இந்திய ஆடவர் அணி,ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது.
ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி,ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு கோல்களை அடித்து முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 14 வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் கோல் அடித்த,மறு நிமிடத்திலேயே ருபிந்தர் பால் சிங் கோல் அடித்து அசத்தினார். மேலும், ஸ்பெயின் அணியை கோல் அடிக்க விடாமல் இந்திய அணியினர் தடுத்து வந்தனர்.
திணறல்:
இதனையடுத்து,இரண்டாவது பாதியில் 51 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி,ருபிந்தர் சிங் கோல் அடித்தார். ஆனால்,இரண்டாவது பாதியிலும் ஸ்பெயின் அணி கோல் அடிக்க முடியாமல் திணறியது.இறுதியில், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
Men in Blue get back to the winning ways in style. ????
Which was your favourite moment from our second win of #Tokyo2020? ????????#HaiTayyar #IndiaKaGame #TeamIndia #TokyoTogether #Cheer4India #StrongerTogether #HockeyInvites #WeAreTeamIndia #HockeyPride pic.twitter.com/e7sZcVKdqA
— Hockey India (@TheHockeyIndia) July 27, 2021
பலமான போட்டி:
இந்திய அணி அடுத்ததாக,ஒலிம்பிக் சாம்பியனான பலம் வாய்ந்த அர்ஜண்டினாவை வியாழக்கிழமை எதிர்கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.