CT 2025 : பாகிஸ்தானுக்கு சம்பவம் உறுதி! கேள்விக் குறியான சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடர்?
சுமார் 7 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் தற்போது அடுத்த ஆண்டு மீண்டும் தொடங்கவுள்ளது.
![ICC Champions Trophy 2025](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/10/ICC-Champions-Trophy-2025.webp)
சென்னை : கடந்த 17 ஆண்டுகளாக இந்திய அணி, பாகிஸ்தான் மண்ணில் எந்த ஒரு விளையாட்டும் விளையாடியதில்லை. இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தானில் அச்சுறுத்தல் இருப்பதனால், அதனைச் சுட்டி காட்டி ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதை இந்திய அணி தவிர்த்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில், 7 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஐசிசியின் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் மீண்டும் அடுத்த வருடம் தொடங்கவுள்ளதால் அதற்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. ஆனால், அந்த சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி முன்பு அறிவித்தது.
அதற்கு இந்திய அணி, பாகிஸ்தானில் இந்த தொடர் நடைபெற்றால் அதற்கு நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என ஐசிசியிடம் தெரிவித்தனர். ஆனாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய அணியை எப்படியாவது அழைத்து வர வேண்டும் என பல நடவடிக்கை எடுத்து வந்தது.
அதில், ஒன்றாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்திய அணியின் அனைத்து போட்டிகளையும் இந்தியா, பாகிஸ்தான் எல்லையான கராச்சியில் நடத்தலாம் என ஒரு யோசனையை வெளிக்கொண்டு வந்தது.
அதற்கான பேச்சு வார்த்தையிலும் இந்திய அணி இருந்து வந்த நிலையில் தற்போது, பாகிஸ்தானில் உள்ள சீன பொறியாளர்களை குறிவைத்து குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் 2பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து 11 பேர் காயமடைந்தாக தெரியவந்தது.
இந்த குண்டு வெடிப்பு தாக்குதலை நடத்தியது பலூசிஸ்தான் லிப்ரெசன் ஆர்மி எனவும் தெரியவந்தது. இந்த தாக்குதல் தற்போது பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கும் அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டி இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருக்கலாம். அதைத் தொடர்ந்து இதே குண்டு வெடிப்பு சம்பவத்தை சுட்டிக் காட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அணிகளும் தொடரில் கலந்து கொள்ளவில்லை என்றால் வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
பல கோடிகளை செலவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த சாம்பியன்ஸ் தொடருக்காக முன்னேற்பாடுகள் செய்திருக்கிறது. ஒருவேளை வேறு ஒரு நாட்டில் இந்த தொடர் நடத்தப்பட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அது பெரிய நஷ்டமாக முடிந்து விடும்.
இதனால், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு தலைவலியாக அமைந்துள்ளது. இதனால், பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் ட்ராபி நடக்குமா என்பதும் கேள்வி குறியாக மாறி இருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)