ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன். இவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 145 டெஸ்டில் பங்கேற்று 708 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் இலங்கை சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனுக்கு (800 விக்கெட்) பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற பெருமை பெற்றவர்.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நியூ சௌத் வேல்ஸின் மூன்று மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில் கடந்த சில நாட்களுக்கு மேலாக அந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பலரும் பாதிக்கப்பட்டு, கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டது. பின்னர் பாதித்தவர்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, காட்டத்தீயின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி வழங்குவதற்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது அவர் தலையில் அணிந்து விளையாடிய பேகி கிரீன் என்ற தொப்பியை(cap) ஏலத்தில் விட்டார்.
இந்நிலையில், வார்னேவின் தொப்பியை வாங்க ஆன்-லைன் மூலம் பலரும் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் கேட்டனர். இதனால் அவருடைய தொப்பி வரலாறு காணாத மிக பெரிய விலைக்கு ஏலம் போனது. இறுதியில் வார்னேவின் தொப்பியை ரசிகர் ஒருவர் ரூ.4 கோடியே 93 லட்சம் ஏலத்தில் எடுத்தார் ($1,007,500 australian dollars). கிரிக்கெட் வீரர் ஒருவர் பயன்படுத்திய பொருள் ஏலம் விடப்பட்டதில் அதிக விலைக்கு போனதில் இதுவே சாதனை தொகையாகும். இதற்கு முன்பு 2003-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் டான் பிராட்மேன் டெஸ்ட் போட்டியில் பயன்படுத்திய தொப்பி ரூ.3 கோடிக்கு ஏலம் போனதே அதிக தொகையாக இருந்தது.
மேலும் அதற்கு அடுத்தபடியாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி 2011-ம் ஆண்டில் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் வெற்றிப்பெற்ற போது பயன்படுத்திய ‘பேட்’ அந்த ஆண்டில் விடப்பட்ட ஏலத்தில் ரூ.92 லட்சத்துக்கு விலை போனது. டோனி மற்றும் பிராட்மேனின் பொருட்களை விட வார்னே பயன்படுத்திய தொப்பி அதிக விலைக்கு ஏலம் போய் வரலாறு படைத்து இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…