முதல் டி20 : இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்!

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு மொஹாலியில் தொடங்க உள்ளது. இந்த டி20 தொடர்தான் இந்திய அணி டி20 உலககோப்பைக்கு முன் விளையாட போகும் கடைசி டி20 தொடராகும். இதற்கு பின் உலககோப்பையில் தான் விளையாட உள்ளனர்.
இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் தலா 15 பேர் கொண்ட அணியுடன் மொஹாலில் களமிறங்க உள்ளனர். இதில் எந்தெந்த வீரர்கள் விளையாட போகிறார்கள் என்பது இன்று இரவே தெரிய வரும். ஆனால் இன்று நடக்கவிருக்கும் முதல் ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி விளையாட மாட்டார். தனிப்பட்ட காரணங்களால் அவர் முதல் போட்டியில் விளையாடமாட்டார் என பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் தெரிவித்து இருந்தார்.
குல்தீப் யாதவ் சாஹலை மிஞ்சிவிட்டார்! இம்ரான் தாஹிர் கருத்து!
இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியும் ஆப்கானிஸ்தான் 5 டி20 போட்டிகளில் நேருக்கு நேராக மோதியுள்ளது. அதில் 4 போட்டியில் இந்திய அணியே வெற்றிபெற்றுள்ளது. 1 போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. எனவே, இன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறவேண்டும் என இரண்டு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தியா
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி. பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தான்
இப்ராஹிம் சத்ரான் (கேப்டன் ), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ரம் அலிகில் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரதுல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜத்ரான், முகமது நபி, கரீம் ஜனாத், அஸ்மாயுல்லா, அஸ்மாயுல்லா , முஜீப் உர் ரஹ்மான், ஃபசல் ஹக் ஃபரூக்கி, ஃபரீத் அஹ்மத், நவீன் உல் ஹக், நூர் அஹ்மத், முகமது சலீம், கைஸ் அஹ்மத், குல்பாடின் நைப் மற்றும் ரஷித் கான்.
லேட்டஸ்ட் செய்திகள்
எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !
February 26, 2025
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025
AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…
February 26, 2025
“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!
February 26, 2025