மகளை மகனாக மாற்றிய தந்தை.. இளம் கிரிக்கெட் வீராங்கனையின் கதை..!
இந்தியாவின் இளம் டி20 கிரிக்கெட் வீராங்கனையாவார், ஷஃபாலி வர்மா. இவர் தனது இளம் வயதில் தனது தந்தை தன்னை பையன் என கூறி கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்தேன் என கூறிய சம்பவம் ஆசிரியத்தை ஏற்படுத்தியது.
தென்னப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 போட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை சூரத்தில் நடந்தது. இந்த போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற காரணமாக இருந்தவர், 15 வயதான இளம் வீராங்கனை ஷஃபாலி வர்மா. இவர் 33 பந்துகளில் 46 ரன்களை விளாசினார்.
இந்நிலையில், ஷஃபாலியின் தந்தை அவரை தனது மகன் என்று கூறி கிரிக்கெட் அகடாமியில் சேர்த்ததாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார். ஷஃபாலி பெண் என்ற காரணத்தினால், ஹரியானாவின் ரோஹ்தக் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் அகாடமியும் பயிற்சி அளிக்க மறுத்துவிட்டன என்று அவர் தந்தை அவரிடம் கூறினார்.
இந்த செய்தியை கேட்டு மனம் உடைந்து போன ஷஃபாலி, ஆண்கள் போன்று தலைமுடி வெட்டிக்கொள்ள அறிவுறுத்தியதாகவும், மகளை மகன் என கூறி கிரிக்கெட் அகாடமியில் சேர்த்ததாகவும் சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
2013 ல்ச்சின் டெண்டுல்கர் தனது கடைசி ரஞ்சி டிராபி போட்டியில் ஹரியானாவுக்கு எதிராக விளையாடும்போது, ஷாஃபாலிக்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் வந்ததாக கூறினார். 10 ஆம் வகுப்பு படித்து வரும் அவர், இந்தியாவுக்காக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.