ஃபிஃபா விதியை மீறி உலகக்கோப்பையை தொட்ட பிரபல செஃப்!வெடித்த சர்ச்சை, விமர்சித்த ரசிகர்கள்.!
ஃபிஃபா விதியை மீறி உலகக்கோப்பையை தொட்ட பிரபல செஃப், சால்ட் பே வை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பிரான்ஸை வென்று அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டம் வென்றது. கொண்டாட்டத்தில் மூழ்கிய ரசிகர்களுக்கு மத்தியில், பிரபல செஃப் ஆன சால்ட் பே என்றழைக்கப்படும் துருக்கியைச்சேர்ந்த நுஸ்ரத் கோக்சே, ஃபிஃபா விதியை மீறி உலகக்கோப்பையுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாவில் பகிர்ந்தது சர்ச்சையை கிளப்பையுள்ளது.
பிரபல உணவகத்தை நடத்தி வரும் சால்ட் பே, அர்ஜென்டினா அணி வீரர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு, உலககோப்பையையும் கையில் வைத்துக்கொண்டு எடுத்த புகைப்படத்தையும் இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
ஃபிஃபா விதிகளின்படி 18காரட் தங்கத்தால் ஆன $20 மில்லியன் மதிப்புள்ள உலகக்கோப்பையை தொடுவதற்கோ, கையில் வைத்திருப்பதற்கோ அனைவர்க்கும் அனுமதி கிடையாது, முன்னாள் மற்றும் இந்நாள் சாம்பியன்கள், நாடுகளின் தலைவர்கள் போன்ற வெகு சிலரே தொடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதனால் வெகுண்டெழுந்த ரசிகர்கள் நீங்கள் ஏன் உலகக்கோப்பையை வைத்திருக்கிறீர்கள், நீங்கள் சாம்பியனா? என்று கேட்டுள்ளார். இன்னொருவர், நீங்கள் உலகக்கோப்பையை தொடக்கூடாது. வீரர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த இந்த உலகக்கோப்பையை நீங்கள் உங்கள் சுய லாபத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
மெஸ்ஸி மட்டுமே இது தெரிந்து, அவரை விட்டு விலகியுள்ளார் என்று மற்றொரு ரசிகரும் பதிவிட்டுள்ளார்.
Fcking absurd. Who let Saltbae out on the pitch? Saw a bunch of photos of him HOLDING the World Cup trophy, and even a picture of him biting on a medal. Atleast Messi knew not to give that guy trying to make THEIR moment about HIM any attention. Desperately grabbing Messi https://t.co/CJzyHZXFes pic.twitter.com/25K4i1k0Ge
— André Noruega (@AndreOstgaard) December 18, 2022