உலகக்கோப்பை தோல்வி எதிரொலி! பாரிஸில் வெடித்த கலவரம்.!

Default Image

ஃபிஃபா உலககோப்பையின் பிரான்ஸ் தோல்வியை அடுத்து, அந்நாட்டின் பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் கலவரங்கள் வெடித்தன.

ஃபிஃபா கால்பந்து உலககோப்பை 2022இன் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக அர்ஜென்டினா பெனால்டி முறையில் நடந்த டை-பிரேக்கரில் 4-2 என்ற கோல்கணக்கில் வென்று உலகக்கோப்பையை கைப்பற்றியது.

இந்த தோல்வியை அடுத்து பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பல பிரெஞ்சு நகரங்களின் தெருக்களில் மோதல்கள் வெடித்ததால், கலவரத்தை அடக்க பிரெஞ்சு போலீசார், கால்பந்து ரசிகர்கள் மீது  கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

பாரிஸ் மற்றும் லியோனின் தெருக்களில், கலவரத்தின் வீடியோக்களையும் படங்களையும் சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்துள்ளனர். கிட்டத்தட்ட 14,000 போலிசார்கள் பாதுகாப்பிற்காக கலவரம் நடந்த இடத்தில் குவிக்கப்பட்டதாகவும், சில ரசிகர்களை கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்