துபாயின் மதிப்புமிக்க கவுரவத்தைப் பெற்ற மூன்றாவது இந்தியர் சானியா ….!!!

Default Image

துபாய் கோல்டன் விசாவானது இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு துபாய் கோல்டன் விசா அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.இந்த விசா காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சானியா மற்றும் அவரது கணவரும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான ஷோயப் மாலிக் ஆகிய இருவரும் 10 ஆண்டுகள் வசிக்க முடியும்.

பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான் மற்றும் சஞ்சய் தத் ஆகியோருக்குப் பிறகு, இந்த மதிப்புமிக்க கவுரவத்தைப் பெற்ற மூன்றாவது இந்தியர் சானியா ஆவார்.

இதுகுறித்து சானியா கூறியதாவது: “துபாய் கோல்டன் விசாவை எங்களுக்கு வழங்கியதற்காக துபாயின் அடையாளம், குடியுரிமை மற்றும் விளையாட்டு பொது அதிகாரத்திற்கான கூட்டாட்சி ஆணையம் ஷேக் முகமது பின்ரஷீத் அவர்களுக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். துபாய் எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் நெருக்கமானது.

ஏனெனில்,இது எனது இரண்டாவது வீடு, நாங்கள் இங்கு அதிக நேரம் செலவிட எதிர்பார்க்கிறோம். இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில குடிமக்களில் ஒருவராக இருப்பதால், இது எங்களுக்கு ஒரு முழுமையான மரியாதை அளிக்கிறது.மேலும்,இது அடுத்த இரண்டு மாதங்களில் திறக்கவுள்ள எங்கள் டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பணியாற்றுவதற்கான வாய்ப்பையும் வழங்கும்”,என்று கூறினார்.

துபாய்க்கு டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் பயிற்சியை வழங்கும் தங்கள் விளையாட்டு அகாடமியை விரைவில் கொண்டுவருவதற்கான முயற்சியில் சானியா மற்றும் ஷோயிப் ஆகியோர் உள்ளனர்.

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி முதல் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளார்.அதில் மகளிர் இரட்டையர் போட்டியில் அங்கிதா ரெய்னாவுடன் அவர் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்