பிரான்சுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெஸ்ஸி அடித்த சர்ச்சை கோல் செல்லாது என பிரெஞ்சு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
கத்தாரில் நடந்த ஃபிஃபா கால்பந்து உலககோப்பையின் இறுதிப்போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் டை பிரேக்கரில் நடந்த பெனால்டி முறையில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த போட்டியில் அர்ஜென்டினா அணியின் 3-வது கோலாக மெஸ்ஸியின் இரண்டாவது கோல் சர்ச்சையில் சிக்கியுள்ளது. முதலில் அந்த கோல் ஆப்சைடு கோல் என கூறப்பட்டாலும் பிறகு அது கோலாக கணக்கில் கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது இந்த கோல் செல்லாது என பிரெஞ்சு ரசிகர்கள் கூறுகின்றனர்.
மெஸ்ஸி அந்த கோல் அடிக்கும்போது அர்ஜென்டினா அணியின் மாற்று வீரர்கள் பந்து எல்லைக்கோட்டை தொடும் முன்பே களத்தில் நுழைந்துள்ளனர். கால்பந்து விதிகளின்படி களத்தில் கூடுதல் வீரர்கள் காணப்பட்டால் அந்த கோல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
இதனால் பிரெஞ்சு ஆதரவாளர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் மெஸ்ஸியின் இந்த கோல் செல்லாது என கூறிவந்தனர். ஆனால் சர்வதேச கால்பந்து சம்மேளன வாரியம், இதனை தெளிவுபடுத்தியுள்ளது, மாற்று வீரர்கள் ஆட்டத்தில் எந்த விதத்திலும் குறுக்கீடு செய்யாததால் இந்த கோல் கணக்கிடப்பட்டது என்று கூறினர்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…