இறந்த குழந்தையை புதைக்க மண் தோண்டிய போது உள்ளே உயிருடன் இருந்த குழந்தை!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி பகுதியை சேர்ந்தவர் ஹிதேஷ் குமார். இவர் மனைவி வைஷாலி இவர் பரேலில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறார். கர்ப்பிணியாக இருந்த இவர் ஏழு மாதத்தின் போது திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து வைஷாலியை அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். குறைப்பிரசவத்தில் இறந்த நிலையில் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து ஹிதேஷ் குமார் அக்குழந்தையை புதைக்காதற்காக சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர்.
அப்போது மண்வெட்டியால் குழி தோண்டிய போது 3 அடி ஆழத்தில் ஒரு சத்தம் கேட்டது. அதனால் ஹிதேஷ் குமார் பொறுமையாக தோண்டினார்.அப்போது ஒரு மண்பானை கிடைத்தது.அந்த மண்பானை திறந்து பார்த்தபோது அதில் ஒரு பெண் குழந்தை உயிரோடு இருந்ததை பார்த்து ஹிதேஷ் குமார் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அந்த பெண் குழந்தையை ஹிதேஷ் குமார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.இது குறித்து அப்பகுதியில் எஸ்.பி அபிநந்தன் சிங் கூறுகையில் , குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தையை புதைத்தது யார் என விசாரித்து வருகிறோம் என கூறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.