ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட தடை இன்று முடிந்தது..!
கேரளாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது. அதன் பின்னர் தடைக்காலம் ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீசாந்த் தடைக்கலாம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
இரண்டு நாள்களுக்கு முன் ஸ்ரீசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், என் மீதான எந்த குற்றச்சாட்டும் இல்லை. இனி நான் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கலாம். அடுத்த 5 முதல் 7 ஆண்டுகள் வரை கொடுத்தால், எந்த அணிக்கும் என்னால் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியும்” என பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2021 ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை சேர்ப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
I’m completely free of any charges nd anything nd now gonna represent the sport I love the most.will give my very best to every ball I ball even it’s just practice.just have another 5 to 7 years max to give it all I’ve got nd I will give the very best to any team I play
— Sreesanth (@sreesanth36) September 10, 2020