அல்-நஸ்ர் ஒப்பந்தம் தனித்துவமானது, நான் ஒரு தனித்துவமான வீரர்- ரொனால்டோ
அல்-நஸ்ர் கிளப் உடனான ஒப்பந்தம் தனித்துவமானது, ஏனென்றால் நான் ஒரு தனித்துவமான வீரர் என ரொனால்டோ கூறியுள்ளார்.
போர்ச்சுகல் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி அரேபியாவின் அல்-நஸ்ர் கிளப் உடன் 2025 ஆம் ஆண்டு வரையிலான ரூ.4,400 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரொனால்டோவின் இந்த முடிவுக்கு பலரும் விமர்சித்து வந்த நிலையில், இது குறித்து ரொனால்டோ கருத்து தெரிவித்துள்ளார்.
ரொனால்டோ கூறியதாவது, அவர் தனித்துவமான வீரர் என்பதால், அல்-நஸ்ர் கிளப் உடனான இந்த ஒப்பந்தம் தனித்துவமானது, மேலும் நான் ஐரோப்பாவில் உள்ள அனைத்து சாதனைகளையும் முறியடித்தேன். இங்கும் சில சாதனைகளை முறியடிக்க விரும்புகிறேன், என்று அவர் கூறினார். அல்-நஸ்ர் கிளப், ரொனால்டோவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டது.