2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடைபெறும் இடம் – சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Default Image

2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியானது ஆஸ்திரேலிய நகரமான பிரிஸ்பேனில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி முதல் 32-வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பிக்கவுள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இப்போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள்.

இந்நிலையில்,2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியானது ஆஸ்திரேலிய நகரமான பிரிஸ்பேனில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

1956 இல் மெல்போர்ன் மற்றும் 2000 ஆம் ஆண்டில் சிட்னிக்குப் பிறகு ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தும் மூன்றாவது ஆஸ்திரேலிய நகரமாக பிரிஸ்பேன் திகழ்கிறது.

இதுகுறித்து,பிரிஸ்பேன் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாவது:

“சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்த அறிவிப்பு பிரிஸ்பேன் மற்றும் குயின்ஸ்லாந்துக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ஒரு வரலாற்று நாள் ஆகும்.ஏனெனில்,உலகளாவிய நகரங்களால் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகளைப் பாதுகாப்பாக நடத்த முடியும்.எனவே,இது உலகளவில் பிரிஸ்பேனின் நிலைப்பாட்டிற்கு ஏற்ற அங்கீகாரமாகும்.

குயின்ஸ்லாந்து மாநிலமானது கடந்த பிப்ரவரியில் ஒலிம்பிக் போட்டி நடத்த அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு விருப்பமான ஹோஸ்டாக இருந்ததால்,கடந்த மாதம் ஒலிம்பிக் நிர்வாகக் குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றது.இதனால்,அமெரிக்காவுக்குப் பிறகு, மூன்று வெவ்வேறு நகரங்களில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவுள்ள உலகின் இரண்டாவது நாடாக ஆஸ்திரேலியா உள்ளது.பொருளாதார வளர்ச்சியையும் சமூக நலன்களையும் நோக்கிய ஆஸ்திரேலியாவுக்கு இது ஒரு முக்கியமான முன்னேற்றத்தை தருகிறது.ஆஸ்திரேலியாவில் போட்டியை நடத்துவது பல ஆண்டுகளுக்கு எதிரொலிக்கும்” என்று கூறினார்.

இந்தோனேசியா, ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட், சீனா, கத்தார் தோஹா மற்றும் ஜெர்மனியின் ருர் பள்ளத்தாக்கு பகுதி உள்ளிட்ட பல நாடுகள் 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்துவதில்  தங்களது பெரும் ஆர்வத்தை வெளிப்படுத்தின.ஆனால் ஐ.ஓ.சி ஏற்றுக்கொண்ட ஒரு புதிய செயல்பாட்டில்,பிரிஸ்பேன் ஏற்கனவே பிப்ரவரியில் மற்ற நாடுகளை விட  ஒரு “விருப்பமான ஹோஸ்டாக” தேர்ந்தெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,ஐஓசி துணைத் தலைவரான ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஜான் கோட்ஸ் கூறுகையில் :”பிரிஸ்பேனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் விடாமுயற்சியுடன், நன்றியுணர்வோடும் மற்றும் உற்சாகமானவர்களின் கைகளில் இருக்கும்.இதனால்,உலக விளையாட்டு வீரர்களுக்கு நான் இந்த உறுதிப்பாட்டைச் செய்கிறேன், மறக்க முடியாத அனுபவத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குவோம்.”” என்று கூறினார்.

நகரத்தின் ஏலம், தற்போதுள்ள இடங்களின் உயர் சதவீதம், அனைத்து மட்ட அரசு மற்றும் தனியார் துறையினரின் ஆதரவு, முக்கிய நிகழ்வுகளை ஒழுங்கமைத்த அனுபவம் மற்றும் அதன் சாதகமான வானிலை போன்றவற்றுக்காக ஐ.ஓ.சியில் இருந்து மீண்டும் மீண்டும் பிரிஸ்பேன் பாராட்டுக்களைப் பெற்றது.

இதற்கு முன்னதாக,ஒலிம்பிக் போட்டிகள் 2024 ஆம் ஆண்டு  பிரான்ஸ் தலைநகர் பாரிசிலும், அதற்கடுத்த போட்டிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்ஜெலஸ் நகரிலும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
2 children HMPV virus
rn ravi sivasankar
RN Ravi - TN Assembly
edappadi palanisamy Who is that sir
ksrtc accident IDUKKI
TN Assembly - RN Ravi