டெல்லியில் இன்று பிசிசிஐ நடத்திய கூட்டத்தில் ஐபிஎல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஐபிஎல் நேர மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.ஐபிஎல் நேரத்தை இரவு 8 மணியிலிருந்து 7 அல்லது 7.30 மணிக்கு மாற்ற ஐபிஎல் ஒளிபரப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் கூட்டம் முடிந்த பிறகு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , இந்த வருடம் நடைபெற உள்ள 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 29-ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 24-ஆம் தேதி நடைபெறும் போட்டி தொடங்கும் நேரத்தில் என கூறினார்.
ஐபிஎல் இறுதிப் போட்டி அகமதாபாத்தில் அல்ல மும்பையில் நடைபெறும் எனவும் , மேலும் ஐபிஎல் இரவு விளையாட்டுகளின் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை. முந்தைய ஆண்டுகளைப் போல இரவு போட்டி 8 மணிக்கு தொடங்கும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கூறினார்.
மேலும் வழக்கம்போல இரண்டு போட்டிகள் அன்று மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணி மட்டுமே போட்டி இருக்கும் என கூறினார். விளையாட்டுக்கான இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பி.சி.சி.ஐ வருமானத்தை பொருத்தமான மன்றத்தில் ஒப்படைக்கும் என்று கங்குலி கூறினார்.
இதைத்தொடர்ந்து தலையில் பந்து தாக்கி காயமடையும் வீரருக்கு பதில் மாற்று வீரர் களமிறங்கும் முறையும் ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…