டெல்லி போலீஸாருக்கு நன்றி தெரிவித்த வீராங்கனை மேரிகோம்! எதற்காக தெரியுமா?

ஊரடங்கு காலத்திலும் தனது மகனின் பிறந்தநாளை கொண்டாடிய பொலிஸாருக்கு நன்றி தெரிவித்த மேரிகோம்.
வீராங்கனை மேரிகோம் பிரபலமான குத்துசண்டை வீரர் ஆவார். இவர், 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனையும், மாநிலங்களவை உறுப்பினரும் ஆவர்.
இந்நிலையில், மேரிகோமின் மகன் தனது 7-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். இதனையடுத்து, டெல்லி போலீஸார், மேரிகோமின் இல்லத்திற்கு வந்து பிறந்தநாளை சிறப்பித்துள்ளனர்.
இதுகுறித்து மேரிகோம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு, ஊரடங்குக்கு மத்தியிலும் தனது மகனின் பிறந்த நாளை சிறப்புவாய்ந்ததாக டெல்லி போலீஸார் மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். நீங்கள்தான் உண்மையான முன்னணி போராளிகள் என்று மேரி கோம் குறிப்பிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025