IPL 2020: சென்னை மண்ணில் கால் பதித்த தல தோனி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, பயிற்சிபெற இன்று சென்னை வந்தடைந்தார்.
உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் நவம்பர் 10 -ம் தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள சென்னை அணி ஆகஸ்ட் 21 -ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் புறப்படவுள்ள நிலையில், 8 அணிகளும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், சென்னையில் நாளை நடைபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி ஆட்டத்திற்காக இன்று சென்னைக்கு அணியின் கேப்டன் தோனி வரவுள்ளதாக செய்திகள் வெளியானது.
அதற்காக நேற்று அவர் கொரோனா பரிசோதனையும் மேற்கொண்டார். அதன் முடிவில் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. இதனைதொடர்ந்து, ராஞ்சியில் இருந்து பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க்க இன்று சென்னை வந்தடைந்தார் தோனி. மேலும், அவர் நாளை முதல் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.