தெரிஞ்சிக்கோங்க..! 21-ம் நூற்றாண்டில் முதல் முறையாக வரலாறு படைத்த டெஸ்ட் போட்டி!

ஆப்கானிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த டெஸ்ட் போட்டி நொய்டாவில் பெய்து வந்த கனமழையால் கைவிடப்பட்டுள்ளது.

AFG vs NZ

சென்னை : ஆப்கானிஸ்தான்-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த டெஸ்ட் போட்டியானது டாஸ் கூட போடாமல் ஒரு கைவிடப்பட்டுள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் கைவிடப்பட்ட 8-வது போட்டியாகும். இந்த சம்பவம் கிரிக்கெட் வரலாற்றில் வரலாறு படைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் மண்ணில் பாதுகாப்பு காரணமாக எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறுவதில்லை. அதனால், ஆப்கானிஸ்தானில் நடைபெற இருக்கும் சுற்றுப்பயணத் தொடரை இந்தியாவில் நடத்தி வருகின்றனர்.

அதற்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐயும் உதவி செய்து வருகிறது. இந்த நிலையில் நியூஸிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அடங்கிய தொடரை விளையாட இருந்தது. அதன்படி, கடந்த செப்-9 ம் தேதி கிரேட்டர் நொய்டாவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிருஷ்டவசமாகத் தொடங்கவில்லை.

அதற்குக் காரணம் செப்-8 ம் தேதி நொய்டாவில் பெய்து வந்த கனமழை தான். அதன் பின் செப்டம்பர் 9மற்றும் 10 ஆகிய தேதிகளில் மழை பெய்யவில்லை என்றாலும் கூட மைதானத்திலிருந்த தண்ணீரை வெளியேற்றுவதற்குத் தேவையான உபகரணங்கள் இல்லாமல் போனது.

இதனால், மைதானத்தைப் பராமரிக்கும் பராமரிப்பாளர்கள் வாலியில் தண்ணீரைப் பிழிந்தும், மின்சார காற்றாடிகளைப் பயன்படுத்தியும் உலர வைக்க முயற்சித்தனர். ஆனால் அந்த முயற்சி அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. இதனால் நடைபெற இருந்த டெஸ்ட் போட்டிக்கு டாஸ் கூட போட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த இந்த டெஸ்ட் போட்டியானது கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 21-ம் நூற்றாண்டில் ஒரு பந்துகூட வீசாமல் கைவிடப்பட்ட முதல் போட்டியாக இந்த போட்டி பதிவாகி இருக்கிறது.

இதற்கு முன் 1998-ம் ஆண்டு நியூஸிலாந்தின் டுனிடின் நகரில் நடைபெற்ற நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகள் மோதிய போட்டி இதே போல ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மேலும் இந்தியாவில், 91 வருடங்களில் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஒரு டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன் கடந்த 1933-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் எந்த ஒரு டெஸ்ட் போட்டியும் இப்படி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டதில்லை. ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்ட 8-வது போட்டியாக இந்த ஆப்கானிஸ்தான் – நியூஸிலாந்து டெஸ்ட் போட்டி பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்