நேவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஒரே ஒரு போட்டியிட்ட கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 347 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி முதலில் 3 போட்டிகளை கொண்ட டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிராக களமிறங்கியது. இதில், 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து மகளிர் தொடரை கைப்பற்றியது.
இதையடுத்து, இங்கிலாந்து – இந்தியா இடையேயான ஒரே போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த 14ம் தேதி நேவி மும்பையில் தொடங்கியது. அப்போது டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதல் இன்னிங்ஸில் இந்திய மகளிர் அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 428 ரன்களை குவித்தது. இதையடுத்து, முதல் இன்னிஸில் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி, 136 ரன்களுக்கு சுருண்டது.
இதன்பி இரண்டாவது இன்னிஸில் 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. பின்னர் இரண்டாவது இன்னிஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்திய மகளிர் அணி 347 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா தோற்கடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா… எம்.ஐ ஜெர்சியை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள்!
இந்த வெற்றி என்பது மகளிர் டெஸ்டில் இதுவரை இல்லாத மிகப்பெரிய வெற்றியாகும். இதற்கு முன் 1998ல் கொழும்பில் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2014ல் இரண்டு முறை வெளிநாட்டில் விளையாடிய இங்கிலாந்துக்கு எதிரான 15 டெஸ்டில் இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்,
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தீப்தி சர்மா மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் பேட் மற்றும் பந்து (67 ரன்கள் 5 விக்கெட்டுகள்) இரண்டிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி, இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார். இதனால் இந்த ஆட்டத்தில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக தீப்தி சர்மா ஆட்டநாயகி விருது பெற்றார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…