பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் ஸ்வெரேவ்!

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Alexander Zverev Won Title

பாரிஸ் : பிரான்சின் தலைநகரான பாரிஸில் ஏடிபி. மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரானது நடைபெற்று வந்தது. இந்த தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்த ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், பிரான்சின் உகோ ஹம்பர்ட் இருவரும் நேற்று இறுதிப் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்தனர்.

இந்த இறுதிப் போட்டி ஆரம்பித்தது முதலே விறுவிறுப்பாகவே நடைபெற்றது. இருப்பினும், ஸ்வெரேவ் தனது சிறப்பான விளையாட்டின் மூலம் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தார். இதன் காரணமாக முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றிய ஸ்வெரேவ், தொடர்ந்து நடைபெற்ற 2-வது செட்டையும் 6-2 எனக் கைப்பற்றி அசத்தினார்.

சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் 6-2, 6-2 என நேர் செட் கணக்கில் உகோ ஹம்பர்ட்டை வீழ்த்தி, இந்த தொடரின் முதல் கோப்பையை வென்று அசத்தினார்.

மேலும், இந்த தொடரில் கோப்பையை வென்றதன் மூலம், பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் கோப்பை வென்ற 2வது ஜெர்மனி வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ஜெர்மனி வீரரான போரிஸ் பெக்கர், 1986, 1989, 1992 ஆகிய 3 வருடங்களில் இந்த பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரைக் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்