தமிழகத்தை சேர்ந்த டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன்(வயது 18) மேகாலாயாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேகலாயாவில் இன்று நடைபெறவுள்ள 83-வது டேபிள் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்ற போது இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர்,உம்லி சோதனைச் சாவடிக்குப் பிறகு,ஷாங்பங்லாவில்,சாலை வளைவில் எதிர் திசையில் இருந்து வந்த 12 சக்கர டிரெய்லர்,தீனதயாளன் சென்ற காரை மோதியதில்,கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் விஷ்வா நோங்போ சிவில் மருத்துவமனையை அடைவதற்குள் இறந்தார்.
மேலும்,விஷ்வாவுடன் பயணித்த பிற இளம் வீரர்களான ரமேஷ் சந்தோஷ்குமார்,அபினாஷ் பிரசன்னாஜி சீனிவாசன், கிஷோர் குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.இதனையடுத்து அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வறின்றனர். இதனையடுத்து,தீனதயாளன் மறைவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…