டென்னிஸ் எனது முழு அடையாளம் அல்ல.. குட்பை சொல்லும் ஜாம்பவான்… பேரதிர்ச்சியை ரசிகர்கள்…

Default Image

டென்னிஸ் மட்டுமே எனது வாழ்க்கை கிடையாது. எனது வீட்டில் நேரம் செலவிடுவது. சாதாரண வழியில் வாழ்வை வாழ்வது நன்றாக இருக்கிறது. – ரோஜர் பெடரர் ஆத்மாத்தமான கருத்து.

உலக புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனை  டென்னிஸ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஒரு ஜாமவனின் ரசிகர்கள் மட்டும் சோகத்தில் இருக்கின்றனர்.

அவர்கள் யாரென்றால் முன்னாள் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். இவர் இந்த விம்பிள்டன் தொடரில் பங்கேற்கவில்லை. அவருக்கு வயது 40 ஆகிவிட்டது. உடல்நல குறைவு, காயம் காரணமாக இந்த தொடரில் அவை விளையாடவில்லை.

இதனை தொடர்ந்து அவர் ஓர் அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார். விம்பிள்டன் தொடரில் பங்கேற்காமல், டிவியில் பார்ப்பது புது அனுபவமாக இருக்கிறது. டென்னிஸ் மட்டுமே எனது அடையாளம் கிடையாது. அது என் வாழ்வில் ஒரு பகுதி மட்டுமே. எனது குழந்தை நல்ல மார்க் வாங்கி என்னிடம் காட்டும் போது அது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

வணிகத்திற்காக செயல்பட வேண்டியதும் முக்கியம். அதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். உலகம் முழுக்க  பயணம் செய்வதை தவறவிடுகிறேன். எனது விளையாட்டை இழக்கிறேன். ஆனாலும், எனது வீட்டில் நேரம் செலவிடுவது. சாதாரண வழியில் வாழ்வை வாழ்வது நன்றாக இருக்கிறது. என தெரிவித்துள்ளார் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர்.

இந்த செய்தி, அவரது ரசிகர்களை சோகமாக்கியுள்ளது. விரைவில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ரோஜர் பெடரர் விலகி கொண்டாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்