யோகா சாம்பியன்ஷிப் போட்டி.! தங்கம் வென்றார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண்.!
ஸ்வீடனில் நடந்த ஐரோப்பிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பில், தென்கிழக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி யோகா வீராங்கனை ஒருவர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். கடந்த வார இறுதியில் மல்மோவில் ஐரோப்பிய யோகாப் போட்டி நடைபெற்றது.
ஸ்வீடிஷ் யோகா விளையாட்டு கூட்டமைப்புடன் இணைந்து சர்வதேச யோகா விளையாட்டு கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்த யோகாப் போட்டியில், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பிரிவில் 13 வயதான ஈஸ்வர் ஷர்மா என்ற வீராங்கனை கலந்து கொண்டார்.
ரோஹித் ஷர்மா கண்டிப்பாக இன்னொரு உலகக் கோப்பையில் விளையாடுவார்.! முத்தையா முரளிதரன்
அந்த போட்டியில் ஈஸ்வர் ஷர்மா தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். கென்ட்டில் உள்ள செவெனோக்ஸைச் சேர்ந்த ஈஸ்வர் ஷர்மா, தனக்கு மூன்று வயதாக இருந்தபோதே தனது தந்தையைப் பின்பற்றி யோகா செய்யத் தொடங்கியுள்ளார். இதனால் பல உலக யோகா சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளார்.
இதுவரை ஐந்து உலக சாம்பியன்ஷிப் பட்டங்களையும், யோகாவில் அவர் செய்த பங்களிப்பிற்காக ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸில் பிரிட்டிஷ் குடிமகன் இளைஞர் விருதையும் வென்றுள்ளார். தனது தந்தையுடன் இணைந்து, யோகா மற்றும் அதன் பல நன்மைகளை இங்கிலாந்தில் பரப்புவதற்காக ஐயோகா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
போட்டியின் கடைசி ஓவரில்.. தோனி கூறிய அறிவுரை இதுதான்.! ரிங்கு சிங் ஓபன் டாக்.!
அதோடு மன இறுக்கம் மற்றும் ஹைபராக்டிவிட்டி கோளாறு உள்ள குழந்தைகளுக்கு யோகாவின் செய்தியைப் பரப்புவதில் ஆர்வம் கொண்ட ஈஸ்வர் ஷர்மா, 14 நாடுகளில் 40 குழந்தைகளுக்கு தினசரி யோகா வகுப்புகளை வழிநடத்தினார். இதனால் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனால் பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.