TeamBharat: “இனி இந்திய அணி இல்லை, பாரத் அணி – வீரேந்தர் சேவாக் X தளத்தில் பதிவு!

Virender Sehwag

இந்தாண்டு ஜி20 கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் இந்தியா தலைமையின் கீழ் நடைபெற உள்ளது. இதன் ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. அதன்படி, உச்சி மாநாடு தொடங்கும் 9-ம் தேதி இரவு விருந்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்க இருக்கிறார்.

இந்த சமயத்தில், இந்திய குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ ஜி20 கூட்டத்தின் சிறப்பு விருந்து அழைப்பிதழ்கள் இன்று காலை முதல் பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு முன் பொதுவாக அரசு அதிகாரப்பூர்வ அழைப்பிதழ்களில் இந்தியா என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால், இன்று வெளியான குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ ஜி20 கூட்டத்தின் சிறப்பு விருந்து அழைப்பிதழ்களில் ‘இந்திய குடியரசு தலைவர்’ என்பதற்கு பதிலாக ‘பிரசிடெண்ட் ஆஃப் பாரத்’ என்ற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரிய அளவிலான விவாதத்தை உருவாக்கி உள்ளது.

இந்த, புதிய மாற்றம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவிற்கு பதில் பாரத் என்ற பெயர் மாற்றத்துக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் விமர்சித்தும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மறுபக்கம் பெயர் மாற்றத்துக்கு பாஜகவினர் உள்ளிட்ட சிலர் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் பெயர் மாற்றம் குறித்து தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், இனி இந்திய அணி இல்லை, பாரத் அணி. இந்த உலகக்கோப்பை தொடரில் கோலி, ரோஹித், பும்ரா, ஜடேஜா ஆகியோரை உற்சாகப்படுத்தும் அதே நேரத்தில், பாரதத்தை நம் மனதில் வைப்போம். இந்திய அணி வீரர்கள் ஜெர்சியில் பாரத் இடம்பெறட்டும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்