விக்ரமின் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக தயாராக உள்ளதாக பா.ரஞ்சித் அறிவித்துள்ளார்.
சியான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தில் மாளவிகா மோகனன் மற்றும் பார்வதி திருவோடு கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என்று இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்கு இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும்.
நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் இணைந்து தயாரித்துள்ள படம், கோலார் தங்க வயல் பின்னணியை கதைக்களமாக கொண்ட, உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக இப்படத்திலிருந்து ஒரு அப்டேட் கூட, வெளியாகமல் இருந்து வந்ததால், எப்போ டீசர் வெளியாகும் காத்திருந்த ரசிகர்களுக்கு குட் நியூஸ் கிடைத்துள்ளது. தற்போது, தங்கலான் திரைப்படத்தின் டீசர் தயாராகி விட்டது என்றும், அடுத்த வாரம் டீசருடன் கூடிய அப்டேட் அடுத்தடுத்த வெளியாகும் என படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
முன்னதாக, இந்த திரைப்படத்தை ஆஸ்கர், கேன்ஸ் உள்ளிட்ட 8 சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. அந்த வகையில், படத்திற்காக எந்த அளவிற்கு படக்குழு கடினமாக உழைத்துள்ளார்கள் என்பது இந்த மேக்கிங் வீடியோவில் தெரிகிறது.
எனவே, படம் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறத. இதற்கிடையில், விக்ரம் நடிப்பில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட படமான ‘துருவ நட்சத்திரம்’ நவம்பர் 24 அன்று பெரிய திரைக்கு வர உள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…