சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற தமிழ்நாடு; வாழ்த்திய முதல்வர், விளையாட்டுத்துறை அமைச்சர்

Senior Women's National Champion

சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழ்நாடு அணி.முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு.

அமிர்தசரஸில் உள்ள குருநானக் ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப்போட்டியில்   ஹரியானாவை  எதிர்த்து விளையாடிய தமிழ்நாடு அணி  2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 5 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது தமிழ்நாடு அணி.இப்போட்டியில் தமிழ்நாடு சார்பாக இந்துமதி, நந்தினி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதற்கு முன்னர் முதல் அரையிறுதியில் நான்கு முறை இறுதிப் போட்டிக்கு வந்த ரயில்வே அணியை தமிழ்நாடு அணி 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது தமிழ்நாடு அணி.

முதலமைச்சர் பாராட்டு:

இது குறித்து வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  27வது சீனியர் மகளிர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் தமிழக மகளிர் அணி சிறப்பான வெற்றியைப் பெற்றதற்கு பாராட்டுக்கள்!

தோல்வியுறாத சாதனையுடன் நீங்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், இந்த சாதனை மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது. உங்கள் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் குழுப்பணி எங்களை பெருமைப்படுத்தியுள்ளது. நீங்கள் தொடர்ந்து உயர்ந்து உயர்ந்து எங்கள் அன்பான மாநிலத்திற்கு மேலும் பாராட்டுகளை கொண்டு வரட்டும் என்று தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் :

தேசிய சீனியர் மகளிர் கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணிக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பரபரப்பான இறுதி ஆட்டத்தில் 2 – 1 என்ற கோல் கணக்கில் ஹரியானாவை வீழ்த்தி தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ள சந்தியா, இந்துமதி உட்பட அத்தனை வீராங்கனையரையும் பாராட்டுகிறேன். .

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில்  பயின்ற வீராங்கனைகளை அதிகம் கொண்ட தமிழ்நாடு மகளிர் கால்பந்தாட்ட அணி, இன்னும் பல சாதனைகளை புரியட்டும். கழக அரசு அவர்களுக்கு துணை நிற்கும் என்று பாராட்டியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்