ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியானது பிரிட்டனில் உள்ள ஐல் ஆஃப் மேன் பகுதியில் நடைபெற்றது. அக்டோபர் 23ம் தேதி முதல் நவம்பர் 6ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி, உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிச்சுற்றின் ஒரு பகுதியாகும். இப்போட்டியில் அனைத்து கண்டங்களில் இருந்தும் 164 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
சுவிஸ் பிரிவின் கீழ் 11 சுற்றுகள் விளையாடப்படும். கிராண்ட் ஸ்விஸ்ஸில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள், 2024 பெண்கள் கேண்டிடேட் தொடருக்குத் தேர்வு பெறுவார்கள். இதில் மகளிர் பிரிவில் இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டரும், 2023 உலக கோப்பை செஸ் தொடரில் இரண்டாம் இடம் பிடித்த ஆர்.பிரக்ஞானந்தாவின் மூத்த சகோதரியான வைஷாலி கலந்து கொண்டு விளையாடினார்.
ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் ஒன்பதாவது சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான பல்கேரியாவின் அன்டோனெட்டா ஸ்டெபனோவா மற்றும் 10வது சுற்றில் முன்னாள் மகளிர் உலக சாம்பியனான சீனாவின் டான் ஜாங்கியையும் எதிர்கொண்டு வெற்றியடைந்தார்.
இதனால் 8 புள்ளிகளை பெற்று முன்னிலைக்கு வந்த வைஷாலி, கனடாவில் நடைபெற உள்ள மகளிருக்கான 2024 செஸ் கேண்டிடேட் தொடரில் விளையாட தேர்வானார். இதையடுத்து, மகளிர் பிரிவில் 11-வது மற்றும் இறுதி சுற்று நேற்று நடைபெற்றது. இதில் மங்கோலிய வீராங்கனை பத்குயாக் முங்குதுலை தமிழக வீராங்கனை வைஷாலி எதிர்கொண்டார்.
இந்த போட்டியானது டிராவில் முடிவடைந்தது. ஆனால் ஃபிட் கிராண்ட் ஸ்விஸ் செஸ் தொடரில் 8.5 புள்ளிகளை வைஷாலி பெற்றியிருந்ததால், சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். தற்போது வைஷாலி 2497.1 லைவ் ரேட்டிங்கைப் பெற்றுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…