பிரக்ஞானந்தா : தமிழக வீரரான பிரக்ஞானந்தா கிளாசிக்கல் (Classical) முறையில், மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருக்கிறார்.
இந்த ஆண்டின் நார்வே செஸ் தொடரானது நார்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன், தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா, நடப்பு உலக செஸ் சாம்பியனான டிங் லிரின் உட்பட 6 பேர் கலந்து கொண்டு இந்த நார்வே செஸ் தொடரில் விளையாடி வருகின்றனர்.
இந்த ஒவ்வொரு சுற்றிலும் ஒரு வீரர் இரண்டு முறை மோத வேண்டும். இதில் முதல் சுற்றில் ஃபிரோஸ்ஜா அலிரேசாவுடன் விளையாடிய பிரக்ஞானந்தா அதில் வெற்றி பெற்றார். அதன் பிறகு 2-வது சுற்றில் நடப்பு உலக செஸ் சாம்பியனான டிங் லிரினுடன் மோதிய பிரக்ஞானந்தா தோல்வி கண்டிருந்தார்.
இந்நிலையில், இந்த தொடரின் 3-வது சுற்றில் பிரக்ஞானந்தா, உலகின் தலை சிறந்த வீரரான கார்ல்சனை எதிர்கொண்டு விளையாடினார். கிளாசிக்கல் முறையில் நடக்கும் இந்த செஸ் போட்டியில் வெள்ளை காய்களை வைத்து பிரக்ஞானந்தா விளையாடினார்.
இவர் தொடக்கத்திலிருந்தே கார்லசனுக்கு ஈடு கொடுத்து விளையாடி போட்டியின் முடிவில் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழக வீரரான பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளை பெற்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த வெற்றியின் மூலம் க்ளாசிக்கல் முறையில் முதல் முறையாக பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…