நார்வே செஸ் : கார்ல்சனை வீழ்த்தினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா !

Norway Chess _ Photo Credit - Chess.com

பிரக்ஞானந்தா : தமிழக வீரரான பிரக்ஞானந்தா கிளாசிக்கல் (Classical) முறையில், மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருக்கிறார்.

இந்த ஆண்டின் நார்வே செஸ் தொடரானது நார்வே நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சன், தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா, நடப்பு உலக செஸ் சாம்பியனான டிங் லிரின் உட்பட  6 பேர் கலந்து கொண்டு இந்த நார்வே செஸ் தொடரில் விளையாடி வருகின்றனர்.

இந்த ஒவ்வொரு சுற்றிலும் ஒரு வீரர் இரண்டு முறை மோத வேண்டும். இதில் முதல் சுற்றில் ஃபிரோஸ்ஜா அலிரேசாவுடன் விளையாடிய பிரக்ஞானந்தா அதில் வெற்றி பெற்றார். அதன் பிறகு 2-வது சுற்றில் நடப்பு உலக செஸ் சாம்பியனான டிங் லிரினுடன் மோதிய பிரக்ஞானந்தா தோல்வி கண்டிருந்தார்.

இந்நிலையில், இந்த தொடரின் 3-வது சுற்றில் பிரக்ஞானந்தா, உலகின் தலை சிறந்த வீரரான கார்ல்சனை எதிர்கொண்டு விளையாடினார். கிளாசிக்கல் முறையில் நடக்கும் இந்த செஸ் போட்டியில் வெள்ளை காய்களை வைத்து பிரக்ஞானந்தா விளையாடினார்.

இவர் தொடக்கத்திலிருந்தே கார்லசனுக்கு ஈடு கொடுத்து விளையாடி போட்டியின் முடிவில் கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழக வீரரான பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளை பெற்று முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்த வெற்றியின் மூலம் க்ளாசிக்கல் முறையில் முதல் முறையாக பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்