மன்னிப்பு கேட்ட தமிழக வீராங்கனை – ஆறுதல் கூறிய ராகுல் காந்தி..!

Published by
Edison

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஃபென்சிங்(வாள் சண்டை) போட்டியில் தோல்வியுற்றதால் மன்னிப்பு கேட்ட தமிழக வீராங்கனை  பவானி தேவிக்கு,காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆறுதல் கூறியுள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த இரண்டு நாட்களாக ஒலிம்பிக் போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில், இன்று காலை முதல் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் சுற்று – வெற்றி:

அதன்படி,இன்று நடைபெற்ற ஃபென்சிங் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி,துனிசியா நாட்டை சேர்ந்த நாடியா பென் அஸிஜியை எதிர்கொண்டார்.போட்டியின் தொடக்கத்தில் இருந்து பவானி தேவி ஆதிக்கம் செலுத்தி 8-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

இதனையடுத்து,பவானி தேவி தனது எதிர்ப்பாளரான அஸிஜியை 2 சுற்றுகளுக்கு மேல்,அவரை மேற்கொண்டு புள்ளிகள் பெற விடாமல்,துல்லியமாக தாக்கியது மட்டுமல்லாமல்,சில ஸ்மார்ட் தொடுதல்களினால் தனது புள்ளிகளையும் சேகரித்தார்.

இறுதியில்,பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.இதனால்,ஒலிம்பிக்கில் ஃபென்சிங் முதல் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய மற்றும் தமிழக வீராங்கனையாக பவானி தேவி உள்ளார்.ஏனெனில்,இந்தியாவில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு ஃபென்சிங் பெண்கள் பிரிவில் யாரும் தேர்வானது இல்லை.

இரண்டாவது சுற்று -தோல்வி:

முதல் சுற்றில் வெற்றியை பதித்த பவானி,இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை மனோன் ப்ருநட்டை எதிர்கொண்டார்.மனோன் ப்ருநட் உலகின் நம்பர் 3 ஃபென்சிங் வீராங்கனை ஆவார். அவர் ஆரம்பம் முதலே பவானி தேவியை  அட்டாக் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.மேலும்,அவர்  11 புள்ளிகள் பெற்ற நிலையில் பவானி தேவி எந்த புள்ளிகளும் பெறவில்லை.

இதனையடுத்து,புள்ளிகள் எடுக்க தொடங்கிய பவானி வேகமாக 7 புள்ளிகள் வரை பெற்றார்.இருப்பினும்,மற்றொரு பக்கம் பிரான்சின் மனோன் ப்ருநட் 15 புள்ளிகளைவரை பெற்றிருந்தார்.எனவே,15 புள்ளிகளை முதலில் எடுப்பவர்தான் வெற்றிபெற்றவர் என்பதால்,மனோன் ப்ருநட் 15 -7 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றுள்ளார்.இதனால்,பவானி தேவி தோல்வியுற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டார்.

மன்னிப்பு:

இதனையடுத்து,இதற்காக மனிப்பு கேட்கும் வகையில் வீராங்கனை பவானி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”மிகப்பெரிய நாள்,இன்று உற்சாகம் & உணர்ச்சிபூர்வமாக இருந்தது.நான் முதல் போட்டியை 15/3 இல் நதியா அஜீசிக்கு எதிராக வென்றேன், ஒலிம்பிக்கில் ஒரு போட்டியை வென்ற முதல் இந்திய ஃபென்சிங் வீராங்கனையாக ஆனேன்.ஆனால் 2 வது போட்டியில் நான் உலகின் 3 வது ஃபென்சிங் வீராங்கனையான மனோன் ப்ரூனெட்டுக்கு எதிராக 7/15 என்ற கணக்கில் தோற்றேன். நான் என் நிலையை சிறப்பாக செய்தேன், ஆனாலும் வெல்ல முடியவில்லை.என்னை மன்னிக்கவும்”,என்று பதிவிட்டிருந்தார்.

ஆறுதல்:

இந்நிலையில்,இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,எம்.பி.யுமான ராகுல்காந்தி,பவானி தேவிக்கு அறுதல் கூறியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:”உங்களது முயற்சியில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. இது வெற்றியை நோக்கிய மற்றொரு படியாகும்”,என்று தெரிவித்துள்ளார்.

 

Published by
Edison

Recent Posts

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

39 minutes ago

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

1 hour ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

2 hours ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

2 hours ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

2 hours ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

3 hours ago