மூன்று அரைசதங்களை விளாசி ராஜஸ்தானை வீழ்த்திய தமிழ்நாடு..!
நேற்று முதல் விஜய் ஹசாரே போட்டி தொடங்கியது. இப்போட்டியில் மொத்தமாக 22 அணிகள் கலந்து கொண்ட நிலையில் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.அதில் சி பிரிவில் தமிழ்நாடு அணி இடம்பெற்று உள்ளது.
தமிழ்நாடு அணிக்கு கேப்டனாக தினேஷ் கார்த்திக் உள்ளார்.இந்நிலையில் நேற்றுதமிழ்நாடு அணியும் ,ராஜஸ்தான் அணியும் மோதியது. இப்போட்டி டாஸ் வென்ற தமிழ்நாடு பந்து வீச முடிவு செய்து , அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 261 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டை இழந்தது.அதில் அதிகபட்சமாக அர்ஜித் குப்தா 77 ரன்கள் எடுத்தார்.
தமிழ்நாடு அணி சார்பில் கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ் 3 விக்கெட்டை வீழ்த்தினார்.262 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணி 48 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 262 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அபிநவ் முகுந்த் 75 ரன்கள் குவித்தார்.மேலும் பாபா அபராஜித் 52 , தினேஷ் கார்த்திக் 52 ரன்கள் என இருவரும் அரைசதம் அடித்தனர்.