திறமை ஒருபோதும் போதாது “பிளேயர் ஆஃப் தி செஞ்சுரி” விருதை பெற்ற ரொனால்டோ.!
திறமை ஒருபோதும் போதாது, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும் என்று நூற்றாண்டின் வீரர் என்ற விருதை பெற்றபின் ரொனால்டோ பேச்சு.
நேற்று துபாயில் நடந்த குளோப் சாக்கர் விருதுகளில் ஜுவென்டஸ் மற்றும் போர்ச்சுகல் சூப்பர்ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோக்கு “பிளேயர் ஆஃப் தி செஞ்சுரி” விருது வழங்கப்பட்டது. 2001 முதல் 2020 வரை உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோக்கு இந்த பரிசு வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றபின் பேசிய ரொனால்டோ, தனக்கு 40 வயதாகும் வரை முதலிடத்தில் இருக்க விரும்புகிறேன் என்றும் திறமை ஒருபோதும் போதாது, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் கைகள் உயரும் என்று தெரிவித்தார். கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது பாராட்டுக்களை, விருதையும் பெற்று பார்வையாளர்களுக்கு முன்னால் மகிழ்ச்சியடைந்தார்.
பின்னர் அவரின் தியாகத்தை பற்றியும் பேசியுள்ளார். விளையாட்டிற்காக தியாகம் செய்ய வேண்டும் என்றும் அப்போதுதான் விளையாட்டின் உச்சியில் இருக்க முடியும் எனவும் குறிப்பிட்டார். அவர் ஆரோக்கியமாக இருப்பதற்கான நீண்ட நேர தூக்கத்திற்கு பதிலாக ஐந்து 90 நிமிட தூக்கத்தை எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். விளையாட்டுகளுக்குப் பிறகு அதிகாலை 2 மணிக்கு அவர் எப்போதும் மசாஜ் பெறுவார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.