“உங்கள் பிரைவேட் ஜெட் விமானத்தை எடுத்துச்சென்று இந்திய வீதிகளில் உள்ள இறந்த உடல்களைக் காணுங்கள்”- மைக்கேல் ஸ்லேட்டர்..!

Default Image

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டர்,”பிரதமர் ஸ்காட் மோரிசன்,உங்கள் பிரைவேட் ஜெட் விமானத்தை எடுத்துச்சென்று,இந்திய வீதிகளில் இறந்த உடல்களைக் காணுங்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றானது மிகவும் தீவிரமடைந்துள்ளது, இதனால்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும்,கொரோனா நோயாளிகள் இறப்பின் எண்ணிகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக,பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை ரத்து செய்துள்ளன.

இதனைத் தொடர்ந்து,ஆஸ்திரேலியாவும் மே 15 வரை இந்தியாவுடனான  விமான சேவையை ரத்து செய்தது.அதன்பின்னர் அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன்,இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்கு வந்தால் 5 ஆண்டுகள் சிறை எனவும்,38 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.மேலும், ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் சொந்த செலவில் நாடு திரும்ப வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

இதனையடுத்து,ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் ஸ்லேட்டர் மே 3 ஆம் தேதி இதுப்பற்றி கூறுகையில்,”கொரோனா பேரழிவிற்குள்ளான இந்தியாவில் சிக்கித் தவிக்கும் நமது நாட்டைச் சேர்ந்தவர்களை திரும்பி வரவழைக்க பிரதமர் ஸ்காட் மோரிசன் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

இந்நிலையில்,மைக்கேல் ஸ்லேட்டர் இன்று மீண்டும் ஆஸ்திரேலிய பிரதமரைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.அதில், “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஆஸ்திரேலியரின் அச்சமும் உண்மையானது.எனவே,பிரதமர் ஸ்காட் மோரிசன் உங்களது பிரைவேட் ஜெட் விமானத்தில் பயணித்து, இந்தியாவின் தெருக்களில் உள்ள இறந்த உடல்களைப் பார்க்கவும்,அப்போதுதான் அங்குள்ள நம் நாட்டைச் சேர்ந்தவர்களின் அச்சம் புரியும்”,என்று பரிந்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து,ஸ்லேட்டர் தனது இரண்டாவது ட்வீட்டில், ” எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் என் அன்பையும் மற்றும் பிரார்த்தனையும் சமர்பிக்கிறேன்.நான் அங்கு வந்த ஒவ்வொரு முறையும் நீங்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள்” என்று ஸ்லேட்டர் ட்வீட் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்