‘இவரை ஆஸி.க்கு கூட்டிட்டு போங்க’! இளம் இந்திய வீரரை பாராட்டிய பாகிஸ்தான் வீரர் பாசித் அலி!
மாயங்க் யாதவ் பந்து வீசும் போது எதிரணி பேட்ஸ்மேன்கள் மிகவும் பயந்து காணப்படுகிறார்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரரான பாசித் அலி கூறியிருக்கிறார்.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான டி20 தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான மாயங்க் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டின் முதல் போட்டியில் அறிமுகமானார். பொதுவாகவே இளம் வீரரை வெகுவாக உற்சாகப்படுத்தும் இந்திய தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீர், இந்த டி20 தொடரில் இளம் வீரர் மாயங்க் யாதவை அறிமுகப்படுத்தி விளையாடவைத்தார்.
அவரது நம்பிக்கை வீன்போகத வண்ணமே மாயங்க் யாதவ் அந்த போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தார். மேலும், அறிமுகமான முதல் போட்டியிலேயே தான் வீசிய முதல் ஓவரை மெய்டனாக வீசி சாதனைப் படைத்திருந்தார். தரமான பந்து வீச்சை அளித்ததன் மூலம் அவருக்கு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர்.
அந்த வரிசையில் பாகிஸ்தான் முன்னாள் வீரரான பாசித் அலி தனது யூட்யூப் சேனலில் மாயங்க் யாதவை பற்றி பேசி இருந்தார். இது குறித்து பேசிய அவரை, ” ஒவ்வொரு வீரருக்கும் கனவாக அமையும் ஒரு அறிமுகப் போட்டி என்பது மாயங் யாதவுக்கும் அமைந்துள்ளது. முதல் ஓவரை மெய்டன் செய்த பிறகும் அடுத்தடுத்த ஓவரிலும் 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி அவர் அசத்தியிருந்தார்.
காயத்திலிருந்து மீண்டு வந்திருப்பதால் அவரால் அதிவேகமாக பந்து வீசியிருக்க முடியாது. ஆனால், அவர் 148, 150 என அதிவேகமாக தான் பந்து வீசி இருக்கிறார். ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் மாயங் யாதவுக்கு சூரியகுமார் முதல் ஓவரை கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால், மேலும் போட்டி சிறப்பாகவே இருந்திருக்கும். பேட்ஸ்மேன்கள் மனதில் பயத்தை உண்டாக்கும் வீரராக மாயங் யாதவ் இருக்கிறார்.
அவர் பந்து வீசும் போது பேட்ஸ்மேன்கள் முன்னாள் வந்து (Front foot) எடுத்து விளையாட பயப்படுகிறார்கள். அவர் முழு உடல் தகுதியுடன் இருந்தால் ஆஸ்திரேலிய அணியுடனான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மாயங்க் யாதவை பயன்படுத்த வேண்டும்”, என பாகிஸ்தான் முன்னாள் வீரரான பாசித் அலி பாராட்டி பேசியிருக்கிறார்.