டி20 உலகக்கோப்பை: இந்திய மகளிர் அணி விக்கெட்டைஇழந்து தடுமாற்றம்.!
- ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரின் முதல் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்தது.
- இந்திய அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.
ஐ.சி.சி மகளிர் டி20 உலகக் கோப்பை 2020 தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.இதில் ஏ , பி என இரு பிரிவுகள் உள்ளன. அதில் ஏ , பி என இரு பிரிவுகளிலும் தலா 5 அணிகள் இடம்பெற்று உள்ளனர்.
இந்நிலையில் இன்று முதல் போட்டி நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்து உள்ளது.
இந்திய அணி வீராங்கனைகள்:
ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன் ), தீப்தி சர்மா, வேத கிருஷ்ணமூர்த்தி, ஷிகா பாண்டே, தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர் ), அருந்ததி ரெட்டி, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட் ஆகியோர் இடம்பெற்றனர்.
ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள்:
அலிஸா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, ஆஷ்லீ கார்ட்னர், மெக் லானிங் (கேப்டன்), எல்லிஸ் பெர்ரி, ரேச்சல் ஹெய்ன்ஸ், அன்னாபெல் சதர்லேண்ட், ஜெஸ் ஜோனாசென், டெலிசா கிம்மின்ஸ், மோலி ஸ்ட்ரானோ, மேகன் ஷட் ஆகியோர் இடம்பெற்றனர்.
தொடக்க வீரர்களாக ஷைபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா இருவரும் இறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே ஸ்மிருதி மந்தனா 10 ரன்னில் வெளியேறினார்.பின்னர் ஹர்மன்பிரீத் கவுர் இறங்கினர். சிறப்பாக விளையாடிய ஷைபாலி வர்மா 29 ரன்களுடன் வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
இந்திய அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 63 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.