ஆஸ்திரேலியாவில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டி பிப்ரவரி 21 முதல் மார்ச் 8-ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் 10 அணிகள் கலந்துகொண்டு, மொத்தம் 23 ஆட்டங்களில் விளையாட உள்ளன. அந்த வகையில் நடப்பு சாம்பியனாக இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தனது முதல் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதைத்தொடர்ந்து வங்கதேசம், நியூஸிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகளுடன் லீக் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 08-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி பட்டியல் அண்மையில் வெளிவந்தது. மேலும் இந்திய அணி முதல் சாம்பியன் பட்டத்தை எதிர்நோக்கி விளையாட இருக்கும் நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளப்பியுள்ளது. இதனிடையே இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்து பயிற்சி போட்டியில் ஈடுபட்டு வருகிறது என்று குறிப்பிடப்படுகிறது.
மகளிர் டி20 உலகக் கோப்பை இந்திய அணி:
ஹர்மான்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தானா, ஷாஃபிலி வெர்மா, ஜெமிமா ராட்ரிகுஸ், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி, ரிச்சா கோஷ், தானியா பாட்டியா, பூனம் யாதவ், ராதா யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஷிகா பாண்டே, பூஜா வஸ்திராகர், அருந்ததி ரெட்டி.
மகளிர் டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியா அணி:
மெக் லேன்னிங் (கேப்டன்), ரேச்சல் ஹெயின்ஸ் (துணை கேப்டன்), எரின் பா்ன்ஸ், ஆஷ்லி காா்டனா், அலிஸா ஹிலி, ஜெஸ் ஜோனஸ்ஸன், டெலிஸா கிம்மின்ஸ், சோபி மொலிநிக்ஸ், பெத் மூனி, எல்ஸி பொ்ரி, மேகன் ஷூட், அன்னபெல் சதா்லெண்ட், டயாலா வயாமெனிக், ஜாா்ஜியா வோ்ஹேம்.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…